English grammar - Lesson 3 : Learn about Present Continuous.

- Present Continuous எப்படி உபயோகிப்பது?

இப்போது நடந்துகொந்டிருக்கும் ஒரு செயலைக் குறிக்க இந்த Present Continuous பயன்படுகிறது. இதுவும் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான am, is மற்றும் are ஆகியவற்றை உபயோகித்து விளக்கப்படுவதால், நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள். am, is அல்லது are-வுடன் "ing"என்று முடியும் சொற்கள் (உதாரணமாக, coming, going, reading, jumping போன்றவை) சேர்ந்து வருவதே Present Continuous. எளிமையான Present Continuous வாக்கியங்களில் இவற்றை எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.

Example
I am (not) -ing I am not working.
நான் வேலை செய்துகொண்டிருக்கவில்லை.
He is (not) -ing Balan is reading a book.
பாலன் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறான்.
She is (not) -ing She is not running.
அவள் ஓடிகொண்டிருக்கவில்லை.
It is (not) -ing It is not watching.
அது கவனித்துக்கொண்டிருக்கவில்லை.
We are (not) -ing We are eating.
நாம் (நாங்கள்) சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
You are (not) -ing You are writing.
நீங்கள் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
They are (not) -ing They are listening.
அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.


Table of Contents | பாட அட்டவணை

Glossaries