English grammar - Lesson 2 : Learn how to use am, is and are in questions.

- am, is மற்றும் are ஆகியவற்றைக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது?

இந்தப் பாடத்தில், am, is மற்றும் are ஆகியவற்றைக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். எளிமையான கேள்வி வாக்கியங்களில் இவற்றை எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.

positive question Example
I am Am I? Am I a student?
நான் ஒரு மாணவனா?
He is Is he? Is he a student?
அவன் ஒரு மாணவனா?
She is Is she? Is she a student?
அவள் ஒரு மாணவியா?
It is Is it? Is it a student?
அது ஒரு மாணவனா?
We are Are we? Are we students?
நாம் (நாங்கள்) மாணவர்களா?
You are Are you? Are you students?
நீங்கள் மாணவர்களா?
They are Are they? Are they students?
அவர்கள் மாணவர்களா?


"I am" என்றால் "நான்"; "Am I?" என்றால் "நானா?". I-ஐயும், am-ஐயும் திருப்பிப்போட்டால் அது கேள்வியாகிவிடுகிறது. அவ்வளவுதான்!

மேலும் சில கேள்விகள் உதாரணங்களால் கீழே விளக்கப்படுகின்றன.

Where is your father? Is he at home? உன் அப்பா எங்கே? அவர் வீட்டில் இருக்கிறாரா?

Where are you? நீ எங்கே இருக்கிறாய்?

What colour is your shirt? உன் சட்டை என்ன நிறம்?

How are your daughters? Are they well? உன் மகள்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா?

Who is that boy? Is he your brother? யார் அந்தப் பையன்? அவன் உன் தம்பியா?

Why are you angry? ஏன் கோபமாக இருக்கிறாய்?



Table of Contents | பாட அட்டவணை

Glossaries