எழுத்து வடிவம்:
படம் – 2: ஈரச்சந்தை
1. இந்தப் படம் ஒரு ஈரச்சந்தையைக் காட்டுகிறது.
2. ஈரச்சந்தை என்பது காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி ஆகியவை
விற்கப்படும் ஓர் இடமாகும்.
3. ஈரச்சந்தை காலை நேரங்களில் மிகுந்த பரபரப்புடன் இருக்கும் இடம்.
4. இப்படத்தில் காட்டப்படும் ஈரச்சந்தையில் அதிக அளவு கூட்டம் இல்லை
என்றாலும் எல்லாக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
5. காலைநேரப் பரபரப்பு முடிந்து முற்பகல் நேரமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
6. படத்தின் இடது கீழ்ப்புற மூலையில் ஒரு மீன்கடைக்காரர் மும்முரமாக
வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்.
7. அக்கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஒரு மலாய்ப் பெண்மணி
நகர, குறிப்பிட்ட மீனைச் சுட்டிக்காட்டி விலையை விசாரிக்கும் ஒரு
மூதாட்டியைக் கவனிக்கிறார் கடைக்காரர். அந்த மூதாட்டி
தள்ளுவண்டியுடன் பொருட்கள் வாங்க வந்திருக்கிறார்.
8. கடைக்கு அருகில் சில பெட்டிகளும் ஒரு வாளியும் இருக்கின்றன.
9. அதற்கு எதிர்ப்புறம் உள்ள கடையில், பழங்கள் விற்கும் கடைக்காரப்
பெண்மணி, மீதி சில்லறையை வாங்க மறந்துவிட்டுப்போன
முதியவரை கைநீட்டிக் கூவி அழைக்கிறார்.
10. இவரின் செயல் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.
11. அதற்கு அடுத்த கடையில் ஒரு பெண்மணி கையில் பையுடன் நிற்க,
ஒரு மூதாட்டி தள்ளுவண்டியுடன் பொருட்கள் வாங்க வந்திருந்தார்.
12. அந்த மூதாட்டி பொருளைக் கையில் எடுத்துப் பார்க்க, கடைக்காரப்
பெண்மணி அம்மூதாட்டியை கடிந்துகொள்கிறார்.
13. இது மிகத் தவறான அணுகுமுறை. வாடிக்கையாளர்களை, அதுவும்
வயதான பெண்மணியை, அவ்வாறு கடிந்துகொள்ளுதல் முறையான
செயல் அல்ல.
14. அதற்கடுத்த கடையில் ஒருவர் பொருள் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
15. மேற்புறத்தின் மூலையில் ஒரு இறைச்சிக்கடையில் ஒரு தாயும் மகளும்
நிற்கிறார்கள். சிறுமி கையில் பையுடன் ஒரமாக நிற்க, தாய்
கடைக்காரருடன் பேசி பொருட்கள் வாங்குகிறார்.
16. கடைக்காரர் சிரித்துக்கொண்டே அப்பெண்மணிக்கு பொருட்களை
விற்கிறார். இது மிகவும் பாராட்டதக்க செயல் என்று நான்
கருதுகிறேன்.
17. எதிர்ப்பக்கம் இருக்கும் மீன் விற்கும் கடையில் கடைக்காரர் மீனை
வெட்டிக் கொண்டிருக்க, வாடிக்கையாளர்கள் மீனை வாங்குவதற்குப்
பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
18. அந்தக் கடைக்கு அருகில் ஒரு பெண்மணி கீழே சிந்திக் கிடந்த
தண்ணீரில் வழுக்கிவிட்டார். அவர் கையில் வைத்திருக்கும் பை கீழே
விழுந்து, உள்ளிருந்த பழங்கள் சிதறி ஓடுகின்றன.
19. கடையில் நின்றுக் கொண்டிருந்த சிறுவன் அதிர்ச்சியில் வாயடைத்து
நிற்கிறான்.
20. ஈரச்சந்தையில் மீன் மற்றும் இறைச்சிகளை அவ்வப்போது
கழுவுவதால் தரையில் தண்ணீர் இல்லாமல் வைத்துக் கொள்வது
முடியாத காரியம் தான் என்றாலும் முடிந்த வரை சுத்தமாக வைத்துக்
கொள்ளுதல் வேண்டும்.
21. ஈரச்சந்தைக்கு வருபவர்களும் இடத்தின் இயல்பை புரிந்துகொண்டு
கவனமாக இருப்பது அவசியம்.