Browse and Search Thirukkural
Welcome to TamilCube’s Thirukkural Search and Browse. Here, you can search Thirukkural couplets and the Tamil and English commentaries in English or Tamil. You can browse all the Thirukkural couplets chapterwise as well.
அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu / Azhukkaaru Ilaadha Iyalpu
Deem your heart as virtuous When your nature is not jealous
Read commentariesவிழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum / Azhukkaatrin Anmai Perin
No excellence excels the one That by nature envies none
Read commentariesஅறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam / Penaadhu Azhukkarup Paan
Who envies others' good fortune Can't prosper in virtue of his own
Read commentariesஅழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin / Edham Patupaakku Arindhu
The wise through envy don't others wrong Knowing that woes from evils throng
Read commentariesஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar / Vazhukka�yum Keteen Padhu
Man shall be wrecked by envy's whim Even if enemies spare him
Read commentariesகொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum / Unpadhooum Indrik Ketum
Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin
Read commentariesஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval / Thavvaiyaik Kaatti Vitum
Fortune deserts the envious Leaving misfortune omnious
Read commentariesஅழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth / Theeyuzhi Uyththu Vitum
Caitiff envy despoils wealth And drags one into evil path
Read commentariesஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan / Ketum Ninaikkap Patum
Why is envy rich, goodmen poor People with surprise think over
Read commentariesஅழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar / Perukkaththil Theerndhaarum Il
The envious prosper never The envyless prosper ever
Read commentaries