Browse and Search Thirukkural
Welcome to TamilCube’s Thirukkural Search and Browse. Here, you can search Thirukkural couplets and the Tamil and English commentaries in English or Tamil. You can browse all the Thirukkural couplets chapterwise as well.
Kural 225
ஈகை
Giving
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
Aatruvaar Aatral Pasiaatral Appasiyai / Maatruvaar Aatralin Pin
English
Higher's power which hunger cures Than that of penance which endures
— 'Mid devotees they're great who hunger's pangs sustain,Who hunger's pangs relieve a higher merit gain
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்
The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)