Browse and Search Thirukkural
Welcome to TamilCube’s Thirukkural Search and Browse. Here, you can search Thirukkural couplets and the Tamil and English commentaries in English or Tamil. You can browse all the Thirukkural couplets chapterwise as well.
குடிமை
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach / Cheppamum Naanum Orungu
Right-sense and bashfulness adorn By nature only the noble-born
Read commentariesஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
Ozhukkamum Vaaimaiyum Naanum Im / Moondrum Izhukkaar Kutippiran Thaar
The noble-born lack not these three: Good conduct, truth and modesty
Read commentariesநகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
Nakaieekai Insol Ikazhaamai Naankum / Vakaiyenpa Vaaimaik Kutikku
Smile, gift, sweet words and courtesy These four mark true nobility
Read commentariesஅடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
Atukkiya Koti Perinum Kutippirandhaar / Kundruva Seydhal Ilar
Even for crores, the noble mood Cannot bend to degrading deed
Read commentariesவழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
Vazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti / Panpil Thalaippiridhal Indru
The means of gift may dwindle; yet Ancient homes guard their noble trait
Read commentariesசலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra / Kulampatri Vaazhdhum En Paar
Who guard their family prestige pure Stoop not to acts of cunning lure
Read commentariesகுடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து.
Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin / Madhikkan Maruppol Uyarndhu
The faults of nobly-born are seen Like on the sky the spots of moon
Read commentariesநலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
Nalaththinkan Naarinmai Thondrin Avanaik / Kulaththinkan Aiyap Patum
If manners of the good are rude People deem their pedigree crude
Read commentariesநிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum / Kulaththil Pirandhaarvaaich Chol
Soil's nature is seen in sprout The worth of birth from words flow out
Read commentariesநலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
Nalamventin Naanutaimai Ventum Kulam / Ventin Ventuka Yaarkkum Panivu
All gain good name by modesty Nobility by humility
Read commentaries